/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏற்காட்டில் கடும் குளிர் வீட்டில் முடங்கிய மக்கள்
/
ஏற்காட்டில் கடும் குளிர் வீட்டில் முடங்கிய மக்கள்
ADDED : ஆக 19, 2025 01:34 AM
ஏற்காடு, ஏற்காட்டில், கடும் குளிர் வாட்டியதால், மக்கள் வீட்டிலேயே முடங்கினர்.
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் நிலவுகிறது. நேற்று காலை கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. மேலும் மதியம், 1:50 மணிக்கு ஏற்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சிறிது நேரம் பலத்த மழை பெய்து, பின் கடும் பனி மூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்தது.
வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டி செல்ல சிரமப்பட்டு, முகப்பு விளக்குளை எரிய விட்டபடி சென்றனர். உள்ளூர் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல், வீட்டில் முடங்கும் சூழல் நிலவியது. கடந்த மூன்று நாட்களாக, சுற்றுலா பயணிகள் குவிந்து காணப்பட்ட படகு இல்லம், நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.