/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டுமனைப்பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் தர்ணா
/
வீட்டுமனைப்பட்டா கேட்டு மாற்றுத்திறனாளிகள் தர்ணா
ADDED : ஜூலை 02, 2024 07:00 AM
சேலம் : தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாழ்வுரிமை சங்க மாநில தலைவர் ராஜரத்தினம் தலைமையில் நிர்வாகிகள், நேற்று காலை மனு கொடுக்க வந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானப்படுத்தியும் கேட்க-வில்லை.
அப்போது ராஜரத்தினம் கூறுகையில், ''மாற்றுத்திறனாளிகள் 39 பேருக்கு வீட்டுமனைப்பட்டா கேட்டு ஒன்றரை ஆண்டாக மன்-றாடி வருகிறோம். மூன்றுமுறை மனு கொடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை. வீடின்றி, பொருளா-தாரத்தில் நலிவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை, வழங்காமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதால், கலெக்டர் வந்து உறுதி யளித்தால் மட்டுமே தர்ணாவை கைவிடு வோம்,'' என்றார். அங்கு வந்த கலெக்டர் பிருந்தாதேவி, தர்ணாவில் ஈடு-பட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது சேலம் கோட்டத்தில், 804, மேட்டூர் கோட்டம், 518, சங்ககிரி கோட்டம் 146; ஆத்துார் கோட்டம் 266 என, மொத்தம் 1,734 பேருக்கு வீட்டுமனை வழங்க பரிசீலனை நடந்து வருகிறது. அவற்றில், உங்களுடைய பெயர் இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து, இல்லாதபட்சத்தில், உங்களுடைய பெயரையும் இணைத்து வீட்-டுமனைப்பட்டா விரைவில் வழங்கப்படும் என்றார். இதைய-டுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.