ADDED : மார் 18, 2024 03:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. அதனால் கலெக்டர் அலுவலகத்தில் திங்களில் நடக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல் விவசாயிகள் குறைதீர் கூட்டமும், நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை ஒத்திவைக்கப்படுகிறது.
மக்களும், விவசாயிகளும், கோரிக்கை மனுவை, கலெக்டர் அலுவலக தரைத்தளத்தில் வைக்கப்பட்டுள்ள மனு பெட்டியில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என, சேலம் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

