/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'வரும் 8 வரை 26 இடங்களில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்'
/
'வரும் 8 வரை 26 இடங்களில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்'
'வரும் 8 வரை 26 இடங்களில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்'
'வரும் 8 வரை 26 இடங்களில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்'
ADDED : அக் 25, 2024 07:07 AM
மேட்டூர்: கொளத்துாரில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நேற்று நடந்தது. அதில் மனு கொடுக்க, ஏராளமானோர் வந்தனர். அவர்களில் சிலரிடம், தி.மு.க.,வை சேர்ந்த, சேலம் எம்.பி., செல்வகணபதி, மனுக்களை பெற்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ''மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், தொகுதி மக்கள், 5,000 பேருக்கு பட்டா வழங்க வேண்டும் என்றார். இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும். மக்கள் கொடுக்கும் மனுக்கள் அனைத்துக்கும் ரசீது வழங்கப்பட்டு விசாரணை நடத்தப்படும். சேலம் மாவட்டம் முழுதும் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் நடத்தப்படும். இடைப்பாடி, இடங்கணசாலை பகுதிகளில் நடந்த முகாம்களில், 3,000 மனுக்கள் பெறப்பட்டன,'' என்றார்.கலெக்டர் பிருந்தாதேவி பேசுகையில், ''மாவட்டத்தில், வரும், 8 வரை, 26 இடங்களில் முகாம் நடக்கிறது. இதில் மக்கள் வழங்கும் மனுக்கள் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
பின், 12 பயனாளிகளுக்கு பட்டா, தையல் இயந்திரம், வேளாண் இடு பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், சமூக பாதுகாப்பு திட்ட சப் - கலெக்டர் மயில், மேட்டூர் சப் - கலெக்டர் பொன்மணி, சேலம் வேளாண் இணை இயக்குனர் சிங்காரம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். கொளத்துாரை தொட ர்ந்து மேட்டூர், நங்கவள்ளி, மேச்சேரியிலும் முகாம்கள் நடந்தன.