/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பலிக்கு காரணமான மின்பெட்டியை அகற்ற மக்கள் எதிர்ப்பு
/
பலிக்கு காரணமான மின்பெட்டியை அகற்ற மக்கள் எதிர்ப்பு
பலிக்கு காரணமான மின்பெட்டியை அகற்ற மக்கள் எதிர்ப்பு
பலிக்கு காரணமான மின்பெட்டியை அகற்ற மக்கள் எதிர்ப்பு
ADDED : மே 24, 2024 07:04 AM
ஓமலுார் : ஓமலுார் அருகே செல்லப்பிள்ளைகுட்டை ஊராட்சி மல்லக்கவுண்டனுாரை சேர்ந்த கூலித்தொழிலாளி வெங்கடேசன், 32.
இவரது மகன் லிங்கேஸ்வரன், 9. கடந்த, 19ல் வீடு அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், அங்கிருந்த மின்பெட்டியை தொட்டதால் மின்சாரம் பாய்ந்து இறந்தான் எனக்கூறி, அப்பகுதி மக்கள், நீதி கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். ஓமலுார் தாசில்தார் ரவிக்குமார், டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தி அனுப்பினர். இறப்புக்கு காரணமான பெட்டிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. நேற்று வி.ஏ.ஓ., ரவிச்சந்திரன் அப்பகுதியில் சென்று விசாரித்தபோது, 'சிறுவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்து நீதி கிடைக்கும் வரை மின் பெட்டியை அகற்றக்கூடாது. இதுதான் எங்களுக்கு சாட்சி' என, மக்கள் கூறினர்.