/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலை வரவு, செலவு தொடர் ஆய்வில் தணிக்கை குழு
/
பெரியார் பல்கலை வரவு, செலவு தொடர் ஆய்வில் தணிக்கை குழு
பெரியார் பல்கலை வரவு, செலவு தொடர் ஆய்வில் தணிக்கை குழு
பெரியார் பல்கலை வரவு, செலவு தொடர் ஆய்வில் தணிக்கை குழு
ADDED : பிப் 01, 2024 03:29 PM
ஓமலுார்: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர், 'பூட்டர் பவுண்டேஷன்' நிறுவனத்தை விதிமீறி தொடங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்தும், பல்கலையில் பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாகவும், தமிழக பல்கலை ஆசிரியர் சங்கம், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம், பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் தமிழக அரசு, உயர்கல்வித்துறை அரசு செயலருக்கு புகார் அனுப்பினர்.
இதனால், தமிழக உள்ளாட்சி தணிக்கை துணை இயக்குனர் நீலாதேவி தலைமையில், 4 பேர் குழுவினர், பெரியார் பல்கலையில், கடந்த, 19ல் ஆய்வு செய்தனர். தொடர்ந்து ஒரு வாரமாக ஆய்வு நடக்கிறது. இதில், 4 ஆண்டுகளில் மேற்கொண்ட வரவு, செலவு கணக்குகள், கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள், மத்திய, மாநில நிதி பங்களிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.