/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆட்சி குழு உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு ஓமலுார், நவ. 6-

ADDED : நவ 06, 2024 01:41 AM
ஆட்சி குழு உறுப்பினர் நியமனத்தில் விதிமீறல் நடந்துள்ளதாக, பெரியார் பல்கலை ஆசிரியர், தொழிலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து சேலம் பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க பொதுச்செயலர் பிரேம்குமார், பல்கலை தொழிலாளர் சங்க பொதுச்செயலர் சக்திவேல் அறிக்கை:
பெரியார் பல்கலையில் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பு ஆட்சிக்குழு. 2005 ஜூன், 24ல் பணியில் சேர்ந்த பொருளியல் துறை உதவி பேராசிரியர் வைத்தியநாதனின் சீனியாரிட்டி புறந்தள்ளப்பட்டு, அதே ஆண்டு ஜூலை, 20ல் பணியில் சேர்ந்த உயிர் வேதியியல் துறை உதவி பேராசிரியை கிருஷ்ணவேணி, ஆட்சிக்குழு உறுப்பினராக துணைவேந்தரால் நியமிக்கப்பட்டுள்ளார். இது அப்பட்டமான விதிமீறல்.
ஏற்கனவே இரு பேராசிரியர்களான பெரியசாமி, ராஜ், மூத்த பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற நிலையில் அது வெறும் தகுதி உயர்வுதான் பதவி உயர்வல்ல எனக்கூறி, அவர்கள் ஆட்சி குழுவில் தொடர அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவும் அடாவடி நடவடிக்கை. ஆட்சி குழுவில் முறைகேடான வழியில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது.
ஊழலுக்கு எதிராகவும், நிர்வாக சீர்கேட்டை தொடர்ந்து தட்டிக்கேட்டு வரும் ஒரே காரணத்திற்காகவும், பெரியார் பல்கலை ஆசிரியர் சங்க தலைவராக நிர்வாகத்தில் நடக்கும் அநியாயங்களை எதிர்த்து போராடி வருவதால் உதவி பேராசிரியர் வைத்தியநாதனுக்கு முறையான வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதனால் கவர்னர், முதல்வர், உயர்கல்வி துறை அமைச்சர் தலையிட்டு, இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.