/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெரியார் பல்கலை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
பெரியார் பல்கலை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 08, 2025 01:15 AM
ஓமலுார், சேலம் பெரியார் பல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில், அதன் வளாகம் முன், நேற்று மாலை, 5:30 மணிக்கு, கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. பொதுச்செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். அதில் பெரியார் பல்கலையில் நேர்மையான நிர்வாகம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். இதில் பல்கலையை சேர்ந்த தொழிலாளர்கள், பாரதிதாசன், திருவள்ளூவர் பல்கலை தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, சங்க சட்ட ஆலோசகர் இளங்கோவன் அளித்த பேட்டி: துணைவேந்தர் ஜெகநாதன், தனியார் நிறுவனம் தொடங்கியதை, தொழிலாளர் சங்கம் எதிர்த்து போராடியது. அதன் விளைவாக, போலீஸ் துறை விசாரணை நடக்கிறது. அனைத்து பல்கலைக்கும், தமிழக முதல்வரே வேந்தராகும் சட்ட திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என, இப்போராட்டம் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.