ADDED : அக் 25, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்துார், ஆத்துார், கல்லாநத்தம் ஊராட்சி, முட்டலில் ஏரி, பூங்கா, ஆணைவாரி நீர் வீழ்ச்சி உள்ளது. கல்வராயன் மலையில் சில நாட்களாக பெய்த கன மழையால், ஆணைவாரி நீர்வீழ்ச்சிக்கு, தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்தது.
இரு நாட்களாக, அங்கு சுற்றுலா பயணியர் செல்ல, வனத்துறையினர் தடை விதித்தனர். நேற்று, தண்ணீர் வரத்து சீரானதால் சுற்றுலா பயணியர் குளிக்க, அனுமதி வழங்கப்பட்டது. அங்கு வனத்துறையினர், தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

