/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாளை கோகுலம் மருத்துவமனை 38ம் ஆண்டு தொடக்க விழா
/
நாளை கோகுலம் மருத்துவமனை 38ம் ஆண்டு தொடக்க விழா
ADDED : அக் 25, 2025 01:05 AM
சேலம், சேலம் கோகுலம் மருத்துவமனை, 38ம் ஆண்டு தொடக்க விழா, சிவராஜ் ஓட்டலில் நாளை நடக்க உள்ளது.இதுகுறித்து மருத்துவமனை மேலாண் இயக்குனர் அர்த்தனாரி கூறியதாவது:சேலம் அதன் சுற்றுவட்டார மக்கள் உயர் சிகிச்சைக்கு பெரிய நகரங்களுக்கு செல்ல வேண்டி இருந்தபோது, அவர்களது மருத்துவ தேவையை பூர்த்தி செய்ய, 5 ரோடு அருகே மெய்யனுாரில் செயல்பட்டு வந்த கோகுலம் ஓட்டலை, ஸ்ரீகோகுலம் மருத்துவமனையாக மாற்றப்பட்டது. 1988 அக்., 23ல், சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ கல்லுாரி முன்னாள் துணைவேந்தர் லலிதா காமேஸ்வரன் தொடங்கிவைத்தார். தற்போது பல்வேறு நவீன மருத்துவ வசதிகளுடன், பல்நோக்கு மருத்துவமனையாக உள்ளது.
அதன், 38ம் ஆண்டு தொடக்க விழா, 5 ரோடு அருகே உள்ள சிவராஜ் ஓட்டலில், அக்., 26ல்(நாளை) நடக்க உள்ளது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சம்பத் தலைமை வகிப்பார். சிறப்பு விருந்தினர்களாக, பெரியார் பல்கலை முன்னாள் துணைவேந்தர் குழந்தைவேலு, ஜி.டி.பி., குழும தலைவர் முத்துராஜன் பங்கேற்பர். மருத்துவமனை இயக்குனர்கள், நிர்வாகிகள், மருத்துவ குழுவினர்களும் கலந்து கொள்ள உள்ளதால், அனைவரும் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

