/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மழையால் நெற்பயிர் பாதிப்பு முழு இழப்பீடு வழங்க கோரிக்கை
/
மழையால் நெற்பயிர் பாதிப்பு முழு இழப்பீடு வழங்க கோரிக்கை
மழையால் நெற்பயிர் பாதிப்பு முழு இழப்பீடு வழங்க கோரிக்கை
மழையால் நெற்பயிர் பாதிப்பு முழு இழப்பீடு வழங்க கோரிக்கை
ADDED : அக் 25, 2025 01:04 AM
மேட்டூர், மேட்டூர், அதன் சுற்றுப்பகுதியில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் நவப்பட்டி ஊராட்சியில், 7 விவசாயிகள் பயிரிட்ட, 12.5 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கி அழுகி வீணாகின. அங்கு சேலம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் நீலாம்பாள்(வேளாண்) தலைமையில், கொளத்துார் வேளாண் உதவி இயக்குனர் சரஸ்வதி, துணை வேளாண் அலுவலர் லோகநாதன், உதவி வேளாண் அலுவலர் ரவி ஆகியோர், நேற்று பார்வையிட்டனர்.
விவசாயி கணேசன் நிலத்தில் சேதமான பயிர்களை பார்வையிட்டபோது, மேட்டூர் வலதுகரை வாய்க்கால் பாசன சங்க பொருளாளர் நாகராஜ் உள்ளிட்ட விவசாயிகள், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முழு இழப்பீடு வழங்க பரிந்துரைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.