/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சோனா தொழில் நுட்பக் கல்லுாரியில் ஆளுமைத்திறன் மேம்பாடு கருத்தரங்கம்
/
சோனா தொழில் நுட்பக் கல்லுாரியில் ஆளுமைத்திறன் மேம்பாடு கருத்தரங்கம்
சோனா தொழில் நுட்பக் கல்லுாரியில் ஆளுமைத்திறன் மேம்பாடு கருத்தரங்கம்
சோனா தொழில் நுட்பக் கல்லுாரியில் ஆளுமைத்திறன் மேம்பாடு கருத்தரங்கம்
ADDED : பிப் 11, 2025 07:33 AM
சேலம்: சேலம், சோனா தொழில் நுட்பக் கல்லுாரியில், தேசிய கேடட்கார்ப்ஸ் சார்பில், கேடட்களிடையே தலைமைத்துவ குணங்கள் மற்றும் திறமையை மேம்படுத்தும் நோக்கத்துடன், 'ஆளுமைத்திறன்
மேம்பாடு மற்றும் தலைமைத்துவம்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.கல்லுாரி
துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா துவக்கி வைத்தார். தலைமை விருந்தினராக விமானப்படைதளபதி சூரத்சிங் கலந்துகொண்டார். ஆயுதப்படையில் சேரு-வதற்கு, வருங்கால
கேடட்களின் உறுதிப்பாடு குறித்து, விமானப்-படைதளபதி சூரத்சிங் பேசுகையில்,'கேடட்கள் ஆயுதப்படைகளில் சேர்வது, எஸ்எஸ்பி ஐ எவ்வாறு
முடித்து வெற்றி பெறுவது என்-பது பற்றிய சந்தேகங்களை' தெளிவுபடுத்தினார்.மேலும் கேடட்களை இணைக்கவும், வளரவும், கற்றுக் கொள்-ளவும் சிறந்த வாய்ப்பை வழங்கியது. இது
அவர்களுக்கு வெற்றி, ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவம் பற்றிய புதிய கண்ணோட்டங்-களையும்
யோசனைகளையும் இந்த கருத்தரங்கம் வழங்கியுள்-ளது. கல்லுாரி துணைத்தலைவர் தியாகு
வள்ளியப்பா, சோனா கல்லுாரி முதல்வர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர், விமானப்-படை தளபதி
சூரத்சிங் மற்றும் குரூப் கமாண்டர் கோயம்புத்துார் கர்னல் ராமநாதன் ஆகியோரை பாராட்டினர்.சோனா கல்விக் குழும துணைத்தலைவர் தியாகு வள்ளியப்பா மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள்
இணைந்து, சோனாவின் திட்ட மேலாண்மை, செயல்பாடுகள் குறித்து விளக்கமளித்தனர். 700க்கும்
மேற்பட்ட ராணுவ, விமானப்படை, என்.சி.சி., வீரர்கள் கலந்துகொண்டனர்.

