/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'மோகினி' அலங்காரத்தில் பெருமாள் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு
/
'மோகினி' அலங்காரத்தில் பெருமாள் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு
'மோகினி' அலங்காரத்தில் பெருமாள் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு
'மோகினி' அலங்காரத்தில் பெருமாள் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு
ADDED : டிச 30, 2025 01:24 AM
சேலம்: வைணவ கோவில்களில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் பரம-பத வாசல் திறப்புக்கு முதல் நாள், தசமி திதியில், பெருமாள், மகாலட்சுமி தாயாரின் ஆபரணங்களை அணிந்து, நாச்சியார் கோலத்தில், 'மோகினி' அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.
அதன்படி சேலம், கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நேற்று, உற்சவர் சுந்தரராஜரின் ஒரு கையில் தங்க கிளி, மறு கையில் வெள்ளி குடம் ஏந்தி, ஒரு காலை மடக்கி அமர்ந்து, நாச்சியார் கோலத்தில், வெண் பட்டுபுடவை சார்த்தி, 'மோகினி' அலங்கா-ரத்தில் அருள்பாலித்தார்.
அதேபோல் பட்டைக்கோவில் வரதராஜர், அம்மாபேட்டை சவுந்-தரராஜர், செவ்வாய்ப்பேட்டை வெங்கடாஜலபதி, பாண்டுரங்க-நாதர், மன்னார்பாளையம் பிரிவு லட்சுமி நரசிம்மர், 2ம் அக்ர-ஹாரம் லட்சுமி நாராயணர் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில், நாச்சியார் கோலத்தில், 'மோகினி' அலங்காரத்தில் காட்சியளித்த சுவாமிகளை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
இன்று அதிகாலை, 5:00 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகி-றது. இதற்கு சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில், பொது தரிசனத்துக்கு வரும் பக்தர்கள், கோட்டை அரசு மகளிர் மேல்நி-லைப்பள்ளி அருகே பழைய புத்தக கடை வீதி வழியே கோவி-லுக்கு வரும்படி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சிறப்பு தரிசனத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள், குண்டு போடும் தெரு வழியே கோவிலுக்கு வர தடுப்பு அமைக்-கப்பட்டுள்ளது.

