ADDED : டிச 03, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருட சேவையில் பெருமாள்
சேலம், டிச. 2-
சேலம், எருமாபாளையத்தில் உள்ள ராமானுஜர் மணிமண்டபத்தில், 7ம் ஆண்டு திருபவித்ர உற்சவம் கடந்த நவ., 28ல் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான கருடசேவை நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு சர்வ அலங்காரத்தில் பெருமாளை, கருட வாகனத்தில் கோவிலை வலம் வரச்செய்தனர். தொடர்ந்து தீர்த்தவாரி, சாற்றுமுறையுடன் உற்சவம் நிறைவு பெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் பட்டாச்சாரியார்கள், பகவத் ராமானுஜ கைங்கர்ய சொசைட்டி நிர்வாகிகள், உற்சவதாரர்கள் செய்திருந்தனர்.