/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற மனு
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற மனு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற மனு
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்ற மனு
ADDED : மே 14, 2025 02:09 AM
நாமக்கல் :'கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை மாற்றியமைக்க வேண்டும்' என, எருமப்பட்டி டவுன் பஞ்., பொதுமக்கள், நாமக்கல் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
எருமப்பட்டி டவுன் பஞ்.,ல் கழிவு நீர் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதாக அறிந்தோம். மேலும், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கும் இடத்தை சுற்றிலும், நன்கு விளையக்கூடிய விவசாய நிலம் உள்ளது. எருமப்பட்டிக்கு விவசாய நிலம் உள்ள பகுதியில் தான், கழிவுநீர் சுத்தகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது. அவ்வாறு அமைத்தால் அப்பகுதியில் உள்ள, 600 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.
அதேபோல், அப்பகுதி சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், விவசாயம் பாழ்படுவதுடன், குடிநீர் மாசடையும். இது தொடர்பாக, 2024 ஜூன், 28 மற்றும் பிப்., 19ல், நாமக்கல் கலெக்டர், டவுன் பஞ்., செயல் அலுவலர், தலைவர் ஆகியோரிடம் இடத்தை மாற்றியமைக்க கோரி மனு அளித்துள்ளோம். பொதுமக்கள், விவசாயம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, கழிவுநீர் அமைக்கும் திட்டத்தை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.