/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலையை அகலப்படுத்தி சுங்கச்சாவடி அமைக்க அமைச்சரிடம் மனு
/
சாலையை அகலப்படுத்தி சுங்கச்சாவடி அமைக்க அமைச்சரிடம் மனு
சாலையை அகலப்படுத்தி சுங்கச்சாவடி அமைக்க அமைச்சரிடம் மனு
சாலையை அகலப்படுத்தி சுங்கச்சாவடி அமைக்க அமைச்சரிடம் மனு
ADDED : பிப் 14, 2025 07:07 AM
மேட்டூர் : 'தொப்பூர்-பவானி தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தி சுங்கச்சாவடி அமைக்க வேண்டும்.' என பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி, மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம் மனு கொடுத்தனர்.
தொப்பூர் - பவானி சாலை, 78 கி.மீ., நீளம் கொண்டது. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அச்சாலை, 7 மீ., அகலத்தில் இருந்து, தற்போது இருபுறமும் தலா, 1.5 மீ., வீதம், 10 மீ., அகலமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தொப்பூர் அடுத்த எருமைப்பட்டி, ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அடுத்த சிங்கம்பேட்டை ஆகிய இரு இடங்களில் சுங்கச்சாவடி கட்டும் பணி நடக்கிறது.
இந்நிலையில், பா.ம.க., மாநில தலைவரான, ராஜ்யசபா எம்.பி., அன்புமணி, மேட்டூர் தொகுதி, எம்.எல்.ஏ., சதாசிவம், டில்லியில் நேற்று, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் அளித்த மனு:தொப்பூர் - பவானி நெடுஞ்சாலை இருபுறமும், 10 அடி அகலப்படுத்தி, சேதமடைந்த பகுதிகளை சீரமைத்த பின் சுங்கச்சாவடி அமைக்க வேண்டும். மேச்சேரி டவுன் பஞ்சாயத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. அதற்கேற்ப அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதை கட்டுப்படுத்த டவுன் பஞ்சாயத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

