/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரெட்டிப்பட்டி ஊராட்சி மக்கள் கலெக்டரிடம் மனு
/
ரெட்டிப்பட்டி ஊராட்சி மக்கள் கலெக்டரிடம் மனு
ADDED : மார் 11, 2025 07:13 AM
சேலம்: ஓமலுார் அடுத்த பெரியேரிப்பட்டி ஊராட்சி மக்கள், நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:
ஊராட்சிக்கு உட்பட்ட, 12 வார்டுகளில், 6,555 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில், ஊராட்சியை சேர்ந்த ரெட்டிப்பட்டி கிராமத்தில் மட்டும், 2,000 பேர் உள்ளனர். மக்கள்தொகை அடிப்படையில் தலா, 6 வார்டு வீதம், ஊராட்சியை இரண்டாக பிரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவ்வாறு செய்தால், அதிக மக்கள் வசிக்கும் ரெட்டிப்பட்டியை தலைமையிடமாக கொண்டு, புதிதாக ரெட்டிப்பட்டி ஊராட்சியை உருவாக்க வேண்டும்.
அதைவிடுத்து, வேறு கிராமங்களை மையமாக வைத்து ஊராட்சியை பிரித்தால், மக்கள் தேர்தலின் போது ஓட்டுப்போடுவது உள்பட பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடும். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ரெட்டிப்பட்டி ஊராட்சி உருவாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.