sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

817 மாற்றுத்திறனாளிகளுக்கு 'பெட்ரோல் ஸ்கூட்டர்' ஒதுக்கீடு

/

817 மாற்றுத்திறனாளிகளுக்கு 'பெட்ரோல் ஸ்கூட்டர்' ஒதுக்கீடு

817 மாற்றுத்திறனாளிகளுக்கு 'பெட்ரோல் ஸ்கூட்டர்' ஒதுக்கீடு

817 மாற்றுத்திறனாளிகளுக்கு 'பெட்ரோல் ஸ்கூட்டர்' ஒதுக்கீடு


ADDED : டிச 08, 2024 04:07 AM

Google News

ADDED : டிச 08, 2024 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் தொங்கும் பூங்கா, பல்நோக்கு அரங்கில் மாற்றுத்திறனா-ளிகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து, 36 பேருக்கு, 'பெட்ரோல் ஸ்கூட்டர்' உள்பட, 124 மாற்றுத்திறனாளிகளுக்கு, 53.38 லட்சம் ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:சேலம் மாவட்டத்தில் இதுவரை, 77,699 மாற்றுத்

திறனாளிகளுக்கு அடையாள அட்டை, கடந்த மூன்றரை ஆண்டு-களில், 37,192 மாற்றுத்திறனாளிகளுக்கு

பராமரிப்பு உதவித்தொகையாக, 82.42 கோடி ரூபாய் வழங்கப்-பட்டுள்ளது. குறிப்பாக, 7,050 மாற்றுத்திறனாளி மாணவர்க-ளுக்கு, 2.76 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை, சுயவேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தில், 181 பேருக்கு வங்கி கடன் மானி-யமாக, 41.67 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், 572 பேருக்கு, 5.58 கோடி ரூபாய் மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட, 'பெட்ரோல் ஸ்கூட்டர்'கள், பார்வைதிறன், செவித்திறன் குறைபாடுள்ள, 917 பேருக்கு, 1.19 கோடி ரூபாய் மதிப்பில் கைத்திறன் பேசிகள் வழங்கப்பட்டுள்-ளன. மூன்றரை ஆண்டுகளில் சேலம் மாவட்டத்துக்கு மட்டும், 100 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நல உதவிகள் மாற்றுத்திற-னாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2024 -25 நிதியாண்டில், 'பெட்ரோல் ஸ்கூட்டர்கள்' 817 பயனாளி

களுக்கு வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன்,

எம்.பி., செல்வகணபதி, எம்.எல்.ஏ., அருள் உள்பட பலர் பங்-கேற்றனர்.






      Dinamalar
      Follow us