/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று 5 மாவட்டங்களில் பி.எப்., குறைதீர் கூட்டம்]
/
இன்று 5 மாவட்டங்களில் பி.எப்., குறைதீர் கூட்டம்]
ADDED : ஜூன் 27, 2025 01:46 AM
சேலம், சேலம் உள்பட, 5 மாவட்டங்களில், இன்று, பி.எப்., குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதுகுறித்து, சேலம் மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர் விக்னேஷ்வரன் அறிக்கை:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் இணைந்து, ஜூன் மாத குறைதீர் கூட்டங்களை, ஜூன், 27ல் (இன்று) நடத்துகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தில் ஓமலுார், சிக்கனம்பட்டி தீரஜ்லால் காந்தி தொழில்நுட்ப கல்லுாரி; ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட் தொழில் துறை வளர்ச்சி மையம், வி - கார்டு இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்; தர்மபுரி மாவட்டத்தில் தேவரசம்பதி பாலாஜி ஹைடெக் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி; நாமக்கல் மாவட்டத்தில் மோகனுார் சாலை ஜெய்விகாஸ் மேல்நிலைப்பள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மாவட்ட கூட்டுறவு நுாற்பாலை ஆகிய இடங்களில், குறைதீர் கூட்டம்
நடக்கிறது.
காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி; மதியம், 2:00 முதல் மாலை, 5:45 மணி வரை என, இரு கட்டங்களாக கூட்டம் நடப்பதால், வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வரம்புக்குட்பட்ட பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள், முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள், குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.