/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நெடுஞ்சாலையில் எரியாத விளக்கு விபத்துக்கு 'பிள்ளையார் சுழி'
/
நெடுஞ்சாலையில் எரியாத விளக்கு விபத்துக்கு 'பிள்ளையார் சுழி'
நெடுஞ்சாலையில் எரியாத விளக்கு விபத்துக்கு 'பிள்ளையார் சுழி'
நெடுஞ்சாலையில் எரியாத விளக்கு விபத்துக்கு 'பிள்ளையார் சுழி'
ADDED : ஜூன் 05, 2025 01:37 AM
ஆத்துார், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. கோவை, ஈரோடு உள்ளிட்ட முக்கிய நகரங்களை இணைக்கும் சாலை. இதில் ஆத்துார் அருகே அம்மம்பாளையத்தை சுற்றியுள்ள மக்கள், இச்சாலை வழியே இரு, நான்கு சக்கர வாகனங்கள் மூலம் சென்று வருகின்றனர்.
இச்சாலை நடுவே மின் விளக்குகள் அமைக்கப்பட்டுளன. ஆனால் இந்த விளக்குகள் எரியாததால், இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி, விபத்தில் சிக்கி காயம் அடைந்து வருகின்றனர்.
கடந்த வாரம், இரவில் ஏற்பட்ட விபத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி ஒருவர் பலியானார். இதுபோன்று தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனால் மின்விளக்குகளை சரிசெய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.