ADDED : ஜூன் 18, 2026 04:42 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி; நிலவாரப்பட்டியில், காய்கறி பயிர்களில் ஒருங்-கிணைந்த பயிர் மேலாண்மை பற்றி பண்ணை பள்ளி நேற்று முன்தினம் நடந்தது. சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய தோட்டக்கலை உதவி பேராசிரியர் முல்லைமாறன், காய்கறி பயிர் சாகுபடியில் ரக தேர்வு, பருவம், நடவு வயல் தயாரித்தல், விதைப்பு போன்ற தொழில்-நுட்பங்கள் பற்றி விளக்கினார். கத்திரி சாகுப-டியில் கடைப்பிடிக்க வேண்டிய தொழில்நுட்ப உத்திகள் குறித்து, தோட்டக்கலை துணை அலு-வலர் வெங்கடாசலம் விளக்கினார்.
காய்கறி பயிர் சாகுபடியில் குழித்தட்டு நாற்-றங்கால் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம், மண் மாதிரி சேகரிப்பு குறித்து நேரடி செயல் விளக்கம் அளித்தனர். வேளாண் அலுவலர் சங்கீதா, உதவி வேளாண் அலுவலர் பிரின்சி, தொழில்நுட்ப மேலாளர் சுமித்ரா ஆகியோர், விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
