/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஏரியில் 1,500 பனை விதை நடவு பணி தொடக்கம்
/
ஏரியில் 1,500 பனை விதை நடவு பணி தொடக்கம்
ADDED : அக் 05, 2025 01:16 AM
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி ரோட்டரி சமுதாயகுழுமம் சார்பில், சந்தியூர் ஆட்டையாம்பட்டி ஏரியில், 1,500 பனை விதை நடவு செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
குழும ஒருங்கிணைப்பாளர் குமரேஷ் தலைமை வகித்தார். தலைவர் நரசிம்மன், செயலர் மணிகண்டன், பொருளாளர் சதீஷ் ஆகியோர், ஏரிக்கரையில் பனை விதையை நடவு செய்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பனை விதைகளை நடவு செய்ய, நத்தமேடு, பெரமனுார் மக்களிடம் வழங்கினர்.
இதையடுத்து பச்சிளங்குழந்தைகளின் கைகளில் நரம்பு கண்டறியும் கருவி, ரோட்டரி சமுதாய குழுமம் சார்பில், பனமரத்துப்பட்டி அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு, மருத்துவ குழுவினரிடம் வழங்கப்பட்டது. குழும முன்னாள் தலைவர்கள் கோபிகண்ணன், ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.