ADDED : அக் 30, 2026 01:05 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், அன்னதானப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கந்தசாமி, 55. பிளம்பர் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம், அழகாபுரம், காந்தி நகரில், மாதேஷ் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் வேலை பார்த்தார். 2வது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்த அவர், தவறி விழுந்தார். படுகாயம் அடைந்ததால், அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் உயிரிழந்தார். அழகாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
