/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு 90.93 சதவீதம் தேர்ச்சி
/
பிளஸ் 1 பொதுத்தேர்வு 90.93 சதவீதம் தேர்ச்சி
ADDED : மே 17, 2025 01:28 AM
சேலம், தமிழகத்தில், பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த மார்ச்சில் நடந்தது. அதில் சேலம் மாவட்டத்தில், 37,434 பேர் பங்கேற்றனர். அவர்களில் மாணவியர், 19,670; மாணவர்கள், 17,764 பேர் அடங்கும். அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 34,037 பேர். இது, 90.93 சதவீதம்.
மாணவியர் தேர்ச்சி, 18,546 பேர். இது, 94.29 சதவீதம். மாணவர் தேர்ச்சி, 15,491 பேர். இது, 87.20 சதவீதம். மாணவர்களை விட கூடுதலாக, 7.09 சதவீத மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு நடந்த, 319
பள்ளிகளில், 65 பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
அரசு பள்ளிகள்
அரசு பள்ளி மாணவ, மாணவியர், 20,795 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவியர், 11,746; மாணவர்கள், 9,049 பேர் அடங்கும். அவர்களில் வெற்றி பெற்றவர்கள், 18,183 பேர். இது, 87.44 சதவீதம்.
மாணவியர் தேர்ச்சி, 10,787 பேர். இது, 91.84 சதவீதம். மாணவர்கள் தேர்ச்சி, 7,396 பேர். இது, 81.73 சதவீதம். மாணவர்களை விட, கூடுதலாக, 10.11 சதவீத மாணவியர் தேர்ச்சியடைந்துள்ளனர். 11 அரசு பள்ளிகள், 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.