/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
புது ஏரியில் குளித்த பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு
/
புது ஏரியில் குளித்த பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு
ADDED : செப் 29, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புது ஏரியில் குளித்த
பிளஸ் 1 மாணவர் உயிரிழப்பு
சேலம், செப். 29-
சேலம், கோட்டை குண்டுபோடும் தெருவை சேர்ந்தவர் பைரோஸ், 49. இவரது மகன் அஜ்மல், 17. நெத்திமேட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்தார். தற்போது காலாண்டு விடுமுறையால் நேற்று மதியம், 1:30 மணிக்கு நண்பர்களுடன் கன்னங்குறிச்சி புது ஏரிக்கு சென்று குளித்தார். நீச்சல் தெரிந்த நிலையில், அவர் மூழ்கிவிட்டார். நண்பர்கள், நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததால் கன்னங்குறிச்சி போலீஸ், தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள், 3 மணி நேரம் தேடி அஜ்மலை சடலமாக மீட்டனர். தொடர்ந்து போலீசார் விசாரிக்கின்றனர்.