/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடக்கம்
ADDED : பிப் 08, 2025 06:45 AM
சேலம்: சேலம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாண-வியர்களுக்கு செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. இயற்-பியல், உயிரியல், வேதியியல், கணினி அறிவியல், தொழிற்கல்வி பிரிவுகள் என, 324 பள்ளிகளில், 37,215 மாணவர்களுக்கு இத்-தேர்வு நடக்கிறது. வரும், 14 வரை நடக்க உள்ள நிலையில், அதற்கான பணியில், 2,044 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். பிளஸ், 1 மாணவர்களுக்கு
வரும், 15ல் செய்முறை தேர்வு தொடங்கும்.மாநில கேரம் போட்டி500 பேர் பங்கேற்புசேலம்: தமிழக கேரம் சங்கம், சேலம் மாவட்ட கேரம் சார்பில், 64வது, மாநில கேடட், சப் -ஜூனியர் கேரம்
சாம்பியன்ஷிப் போட்டி, அம்மாபேட்டையில் நேற்று தொடங்கியது. அகில இந்திய கேரம் சம்மேளன
துணைத்தலைவர் நாசர்கான் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். சேலம், நாமக்கல், தர்மபுரி, ஈரோடு உள்பட, 20க்கும் மேற்-பட்ட மாவட்டங்களை சேர்ந்த, 500க்கும்
மேற்பட்ட வீரர், வீராங்-கனைகள் பங்கேற்றனர். 12, 14 வயது பிரிவுகளில் ஆண், பெண்க-ளுக்கு
தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு மாவட்ட அணியினரும் விளையாடினர்.
தொடர்ந்து இன்று, நாளை நடக்கிறது. முடிவில் ஒவ்வொரு பிரிவிலும், 8 பேருக்கு பரிசு வழங்கப்படும்.