/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கிணற்றில் வீசப்பட்ட பா.ம.க., கொடி கம்பம்
/
கிணற்றில் வீசப்பட்ட பா.ம.க., கொடி கம்பம்
ADDED : நவ 02, 2024 04:32 AM
இடைப்பாடி: கொங்கணாபுரம் அருகே, பா.ம.க., கொடி கம்பத்தை கழற்றி கிணற்றில் வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே, வி.மேட்டுபாளையம் பகுதியில், 30 ஆண்டுகளுக்கு முன், இரும்பிலான பா.ம.க., கொடி கம்பத்தை நட்டு, இதுநாள் வரை கட்சி நிகழ்ச்சிகளில் கொடியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் கொடி கம்பத்தை கடந்த, 30 இரவில் மர்ம நபர்கள் சிலர் கழற்றி, அருகில் உள்ள கிணற்றில் வீசியுள்ளனர். தகவல் அறிந்த பா.ம.க., நிர்வாகிகள், நேற்று முன்தினம் அப்பகுதியில் முற்றுகையிட்டு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.கொடி கம்பத்தை அகற்றியவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். கொங்கணாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.