/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்று பா.ம.க., பொதுக்குழு மாநகர் மா.செ., அழைப்பு
/
இன்று பா.ம.க., பொதுக்குழு மாநகர் மா.செ., அழைப்பு
ADDED : அக் 26, 2025 01:14 AM
சேலம், சேலம் மாநகர் மாவட்ட செயலர் கதிர் ராசரத்தினம் அறிக்கை:
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட, பா.ம.க., பொதுக்குழு கூட்டம், அக்., 26(இன்று) காலை, 10:00 மணிக்கு, இரும்பாலை பிரதான சாலையில் உள்ள, டி.எஸ்.கே., திருமண மண்டபத்தில் நடக்க உள்ளது. மாநில இணை பொதுச்செயலரான, எம்.எல்.ஏ., அருள் தலைமை வகிக்கிறார். மாநகர் மாவட்ட செயலர் கதிர் ராசரத்தினம் வரவேற்கிறார். மாவட்ட செயலர்கள் நடராஜன், செல்வம், ராஜேந்திரன், பச்சமுத்து, மாவட்ட தலைவர்கள் கோவிந்தன், லட்சுமணன், வக்கீல் துரைராஜ், ராஜமாணிக்கம், தொப்பாகவுண்டர் முன்னிலை வகிக்கின்றனர்.
நிறுவனர் ராமதாஸ், கவுரவ தலைவர் மணி, மாநில வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, மாநில நிர்வாக குழு உறுப்பினர் காந்தி பரசுராமன், மாநில இளைஞர் சங்க தலைவர் தமிழ்குமரன், மாநில தேர்தல் பணி குழு செயலர் சதாசிவம், மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர்.
அதனால் பா.ம.க., சார்பு அமைப்புகள், கிளை, நிர்வாகிகள், டிவிஷன் பொறுப்பாளர்கள், ஒன்றிய செயலர்கள், தலைவர்கள், மாவட்ட, மாநில பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகளும் வந்து, சேலம் ஒட்டுமொத்த பா.ம.க.,வும், நிறுவனர் ராமதாஸ் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள் என்ற உண்மை நிலையை நிரூபித்து காட்ட கேட்டுக்கொள்கிறோம்.

