/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மண்டல அலுவலகம் இடமாற்ற பா.ம.க., எதிர்ப்பு
/
மண்டல அலுவலகம் இடமாற்ற பா.ம.க., எதிர்ப்பு
ADDED : டிச 15, 2024 01:04 AM
சேலம், டிச. 15----
சூரமங்கலம் மண்டல அலுவலகத்தை இடமாற்ற முயற்சிக்கும் முடிவை கைவிடாவிட்டால், சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படும் என, பா.ம.க.,வின், சேலம் மேற்கு தொகுதி, எம்.எல்.ஏ., அருள் அறிவித்தார். அதன்படி, 50க்கும் மேற்பட்ட கட்சியினர், நேற்று போராட்டம் நடத்த, கமிஷனர் அலுவலகம் வந்தனர். அப்போது எம்.எல்.ஏ.,விடம், மாநகராட்சி கமிஷனர் ரஞ்ஜீத்சிங், மொபைல் போனில் பேசினார். இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதுகுறித்து அருள் கூறுகையில், ''அரசியல் காரணங்களால் இடமாற்ற, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். அதனால், மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சூரமங்கலத்திலேயே செயல்பட அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இதை ஏற்பதாக, கமிஷனர் தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது,'' என்றார்.