/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சாலை தடுப்பில் மோதி பொக்லைன் டிரைவர் பலி
/
சாலை தடுப்பில் மோதி பொக்லைன் டிரைவர் பலி
ADDED : ஏப் 14, 2025 06:36 AM
சேலம்: திருப்பத்துார் மாவட்டம் விஷாமங்கலத்தை சேர்ந்தவர் சந்தோசம், 36. இவருக்கு மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். சந்தோசம், வெப்படையில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் பொக்லைன் டிரைவராக வேலை பார்த்தார். அவர் நேற்று காலை, 7:30 மணிக்கு, ஹெல்மெட் அணிந்து கொண்டு, சேலம் மாவட்டம் சீரகாபாடியில் புல்லட்டில் வந்து கொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த புல்லட் தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்பில் மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட அவரை, மக்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழியில் அவர் உயிரிழந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கொத்தனார் சாவு
தாரமங்கலம், பாப்பம்பாடி, நத்தியாம்பட்டியை சேர்ந்த, கொத்தனார் சித்தன், 60. கடந்த, 8ல் வேலைக்கு செல்ல, சின்னப்பம்பட்டி அருகே மூலக்கடை பஸ் ஸ்டாப்பில், அதிகாலை, 5:50 மணிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது 'எக்ஸல் ஹெவி டூட்டி' மொபட் மோதியதில் காயம் அடைந்த சித்தனை, மக்கள் மீட்டு, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்தன், நேற்று இறந்தார். அவரது மகன் கனகராஜ் புகார்படி, தாரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.