/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவியிடம் அத்துமீறிய முதியவர் மீது 'போக்சோ'
/
மாணவியிடம் அத்துமீறிய முதியவர் மீது 'போக்சோ'
ADDED : நவ 21, 2025 03:10 AM
சங்ககிரி, இடைப்பாடியை சேர்ந்த, லாரி டிரைவரின், 14 வயது மகள், தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படிக்கிறார். டிரைவர் கடந்த, 13ல் குஜராத்துக்கு லாரி ஓட்டிச்சென்றார். 16ல் வீட்டில் இருந்த தாத்தா, பாட்டி வெளியே சென்ற நிலையில், மாணவி வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பழனியப்பன், 75, வீடு புகுந்து மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றார். அவர் கூச்சலிட, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, மாணவியை மீட்டனர்.
இதுகுறித்து, மாணவி, மொபைல் போன் மூலம், தந்தையிடம் தெரிவித்தார். உடனே அவர், நேற்று வீடு திரும்பி, சங்ககிரி மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, 'போக்சோ' சட்டத்தில் வழக்குப்பதிந்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

