/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவியை சீண்டிய தற்காலிக ஆசிரியர் மீது பாய்ந்தது 'போக்சோ'
/
மாணவியை சீண்டிய தற்காலிக ஆசிரியர் மீது பாய்ந்தது 'போக்சோ'
மாணவியை சீண்டிய தற்காலிக ஆசிரியர் மீது பாய்ந்தது 'போக்சோ'
மாணவியை சீண்டிய தற்காலிக ஆசிரியர் மீது பாய்ந்தது 'போக்சோ'
ADDED : நவ 24, 2024 01:06 AM
மாணவியை சீண்டிய தற்காலிக
ஆசிரியர் மீது பாய்ந்தது 'போக்சோ'
இடைப்பாடி, நவ. 24-
இடைப்பாடி, இருப்பாளி அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண் குழு மூலம் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணிபுரிபவர் பிரகதீஸ்வரன், 39. விடுமுறை நாளான நேற்று, சிறப்பு வகுப்பு நடந்தது. 10ம் வகுப்புக்கு பாடத்தை, பிரகதீஸ்வரன் நடத்தினார். அப்போது, ஒரு மாணவிக்கு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி, உடனே வீட்டுக்கு சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதை அறிந்த பிரகதீஸ்வரன், வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், அவரது உறவினர்கள், பள்ளியை முற்றுகையிட்டு, பிரகதீஸ்வரனை கைது செய்யக்கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர். பூலாம்பட்டி போலீசார் வந்து பேச்சு நடத்தினர். பின் பிரகதீஸ்வரன் வீட்டுக்கு சென்ற போலீசார், அவரை பிடித்து, சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். பிரகதீஸ்வரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.