/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை மிரட்டிய இருவர் மீது போக்சோ பாய்ந்தது
/
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை மிரட்டிய இருவர் மீது போக்சோ பாய்ந்தது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை மிரட்டிய இருவர் மீது போக்சோ பாய்ந்தது
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய சிறுமியை மிரட்டிய இருவர் மீது போக்சோ பாய்ந்தது
ADDED : ஏப் 29, 2025 02:09 AM
பனமரத்துப்பட்டி:
வீடியோ காலில் பேசியதை, சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக சிறுமியை மிரட்டிய, இரு வாலிபர்கள் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமி பிளஸ் 2 தேர்வு எழுதியுள்ளார். அவருக்கு, சென்னை எருக்கஞ்சேரியை சேர்ந்த கிேஷார், 22, என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அவர், சிறுமியை 'வீடியோ' காலில் பேசும்படி வற்புறுத்தினார். வீடியோ காலில் சிறுமி அடிக்கடி பேசியுள்ளார். சிறுமியின் வீடியோ கால் அழைப்பை பதிவு செய்த கிேஷார், அவரது நண்பர் முகம்மது அலிக்கு அனுப்பியுள்ளார்.
அந்த இருவரும் சேர்ந்து,  நாங்கள் சொல்வதை செய்ய வேண்டும். மறுத்தால், வீடியோ கால் பதிவை சமூக வலைதளத்தில் வெளியிடுவோம் என, சிறுமியை மிரட்டியுள்ளனர். சிறுமியை சந்திக்க கிேஷார், முகம்மது அலி இருவரும் கடந்த, 26ல், சேலம் வந்தனர்.
இது குறித்து, சிறுமியின் பெற்றோர் சேலம் பெண் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் தெரிவித்தனர். பனமரத்துப்பட்டி போலீசார், கடந்த, 26ல், ஒண்டிக்கடை பஸ் ஸ்டாப் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னையில் இருந்து சிறுமியை சந்திக்க வந்த கிேஷார், முகம்மது அலி ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர்.
பனமரத்துப்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் வீடியோ கால் பதிவை வைத்து, பாலியல் தொல்லை கொடுத்து, மிரட்டியது தெரிந்தது. சிறுமியை மிரட்டிய கி ேஷார், 22, முகம்மது அலி, 22, ஆகியோரை போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்து, ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அவர்கள் பயன்படுத்திய யமஹா பைக் பறிமுதல் செய்யப்
பட்டது.

