/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பொக்லைன் உரிமையாளர்கள்வேலை நிறுத்த போராட்டம்
/
பொக்லைன் உரிமையாளர்கள்வேலை நிறுத்த போராட்டம்
ADDED : மே 02, 2025 02:36 AM
இடைப்பாடி:-சங்ககிரி தாலுகா எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கம் சார்பில், 100க்கும் மேற்பட்ட பொக்லைன் உரிமையாளர்கள், வாடகை கட்டணத்தை உயர்த்த வேண்டி, நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் தலைவர் கிருஷ்ணன் தலைமையில், தேவூரில் கோணக்கழுத்தானுார், காணியாளம்பட்டி, அம்மாபாளையம், புதுப்பாளையம், பெரமச்சிபாளையம், அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் உள்ள எல்லப்பாளையம், செட்டிப்பட்டி, ஒடசக்கரை, குள்ளம்பட்டி, ஓலப்பாளையம், ஆலத்துார் ரெட்டிபாளையம், காவேரிபட்டி ஊராட்சி சென்றாயனுார், மொத்தையனுார், கத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, பொக்லைன் உரிமையாளர்கள், 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதுகுறித்து உரிமையாளர்கள் கூறுகையில், 'பொக்லைன் வாகன உதிரிபாக விலை உயர்வு, டீசல், இன்சூரன்ஸ், புது வாகன விலை உயர்வு, சாலை வரி உயர்வு போன்ற காரணங்களால், பொக்லைன் உரிமையாளர்கள் நஷ்டத்தை சந்திக்கிறோம். அதனால் இயந்திர கட்டணத்தை, குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்துக்கு வாடகை கட்டணமாக, 2,500 ரூபாய், ஒரு மணி நேரத்துக்கு மேலாக தொடர்ந்து வேலை செய்தால் ஒரு மணி நேரத்துக்கு, 1,300 ரூபாய் வாடிக்கையாளர்கள் வழங்கக்கோரி, போராட்டம் நடந்தது' என்றனர்.