மருத்துவமனை நிர்வாகி வாணியம்பாடி அருகே, பயிற்சி செவிலியர் மாணவியரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகி மீது, போக்சோவில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துகோவில் பகுதியில் ஜாவித் என்பவருக்கு சொந்தமான தனியார் மருத்துவ-மனை இயங்கி வருகிறது. இங்கு, பயிற்சிக்காக வரும் நர்சிங் மாணவியரிடம், மருத்துவமனை நிர்வாகி ஜாவித், பாலியல் சீண்-டலில் ஈடுபடுவதாக மாணவியர் குற்றம் சாட்டி வந்தனர். இது குறித்த தகவல் வைரலானது.
நேற்று முன்தினம் மருத்துவமனைக்கு சென்ற அம்பலுார் போலீசார், மருத்துவமனை நிர்வாகத்திடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது செவிலியர் மாணவி ஒருவர் கொடுத்த புகார் படி, நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனை நிர்வாகி ஜாவித் மீது போலீசார், வழக்குப் பதிந்து, தலைமறைவான ஜாவித்தை தேடி வருகின்றனர்.
தீயணைப்பு வீரர்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் சைதாப்பேட்-டையை சேர்ந்தவர் ராஜேஷ்கன்னா, 32. ஆரணி தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த தீயணைப்பு நிலையம் அருகேயுள்ள பஸ் நிறுத்தத்தில், 8ம் வகுப்பு படிக்கும் தனியார் பள்ளி மாணவி பஸ் ஏறி பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இதை நோட்டமிட்ட தீயணைப்புத்துறை வீரர் ராஜேஷ்கன்னா, மாணவி-யிடம் நைசாக பேச்சு கொடுத்து, அவரது மொபைல் எண்ணை வாங்கி உள்ளார்.
மேலும் அவரை காதலிப்பதாகவும், வெளியில் சென்று வரலாம் எனவும் பேசி, 'வாட்ஸாப்'பில் தகவல் அனுப்பினார். அதிர்ச்சிய-டைந்த மாணவியின் தாய், ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். ராஜேஷ்கன்னா அரசு ஊழியர் என்பதால், போலீசார் வழக்கு பதியாமல் காலம் தாழ்த்தினர். இதனால் மாண-வியின் தாய்மாமன் சுந்தர்ராஜன், அவருடைய நண்பர் உதயகுமார் ஆகியோர் நேற்று முன்தினம் ராஜேஷ்கன்னாவை அடித்து, உதைத்து, அவரை திருவண்ணாமலை எஸ்.பி., அலுவலகத்திற்கு ஆட்டோவில் அழைத்து சென்று புகார் செய்தனர். எஸ்.பி., சுதாகர் உத்தரவின்படி, ஆரணி அனைத்து மகளிர் போலீசார், ராஜேஷ்கன்னாவை போக்சோவில் கைது செய்தனர்.
இந்நிலையில் தன் கணவரை, சுந்தர்ராஜன், உதயகுமார் ஆகியோர் அடித்து, உதைத்து ஆட்டோவில் கடத்தி சென்றதாக, ராஜேஷ்கன்னாவின் மனைவி ஐஸ்வர்யா புகார் படி, ஆரணி டவுன் போலீசார், விசாரித்து வருகின்றனர்.
மூட்டை துாக்கும் தொழிலாளி
வேலுார் மாவட்டம், குடியாத்தத்தை சேர்ந்தவர் மூட்டை துாக்கும் தொழிலாளி சுப்பிரமணி, 63. இவர், 5 வயது சிறுமிக்கு, சாக்லேட் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, அருகிலுள்ள பெட்டிக்கடைக்கு அழைத்து சென்று பாலியல் சில்மிஷத்தில் ஈடு-பட்டார். அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து தப்பி, தன் பெற்-றோரிடம் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் புகார் படி, குடியாத்தம் அனைத்து மகளிர் போலீசார், போக்-சோவில் முதியவர் சுப்பிரமணியை கைது செய்து, விசாரித்து வரு-கின்றனர்.