/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மோசடி வழக்கில் 2 பேர் தலைமறைவு தகவல் தெரிவிக்க போலீசார் அழைப்பு
/
மோசடி வழக்கில் 2 பேர் தலைமறைவு தகவல் தெரிவிக்க போலீசார் அழைப்பு
மோசடி வழக்கில் 2 பேர் தலைமறைவு தகவல் தெரிவிக்க போலீசார் அழைப்பு
மோசடி வழக்கில் 2 பேர் தலைமறைவு தகவல் தெரிவிக்க போலீசார் அழைப்பு
ADDED : ஜூலை 25, 2025 01:05 AM
சேலம், முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக உள்ள, 2 பேர், பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, அவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், போலீசாருக்கு தெரிவிக்கும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் பொருளாதார குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சந்திரசேகரன் அறிக்கை:
சேலம் மாவட்டம் ஓமலுார், சாமிநாயக்கன்பட்டி அருகே ஆனைகவுண்டம்பட்டி பொறியியல் கல்லுாரி எதிரே, 'சூர்யா ஈமு பார்ம்ஸ், சூர்யா பவுல்ட்ரி மற்றும் ஈமு பார்ம்ஸ்' நிறுவனங்களை சேர்ந்த ஜெயகுமார், சுரேஷ், சரவணன் ஆகியோர், ஈமு கோழி வளர்ப்பில் கவர்ச்சி திட்டங்களை கூறி, மக்களிடம் இருந்து, 72 லட்சம் ரூபாயை பெற்று திருப்பி தரவில்லை.
அந்நிறுவனத்தை சேர்ந்த, 3 பேர் மீது, 2013ல், சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டதால் வழக்குப்பதிந்து விசாரணை நடக்கிறது. கோவையில் உள்ள, தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு நலன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதன் விசாரணைக்கு ஆஜராகி வந்த சுரேஷ், 2019 செப்., 30 முதல் ஆஜராகவில்லை. நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. போலீசார் தேடும் நிலையில், தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
அதேபோல் சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டி, பெட்ரோல் பங்க் அருகே, கே.ஜி.ஆர்., சூப்பர் மார்க்கெட்டை, கோவிந்தராஜ், கீதாலட்சுமி, அமுதா ஆகியோர் தொடங்கினர். தொடர்ந்து, பல்வேறு திட்டங்கள் இருப்பதாக கூறி, மக்களிடம், 7.11 கோடி ரூபாய் முதலீடு பெற்று திரும்ப செலுத்தாமல் இருந்தனர்.
பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிந்து, கோவை டான்பிட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாததால், கோவிந்தராஜூக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை போலீசார் தேடிவந்த நிலையில், தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
அதனால் சுரேஷ், கோவிந்தராஜ் ஆகியோர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக நீதிமன்றம் அறிவித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது.
இவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், சேலம், அழகாபுரம், பஞ்சவர்ண நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் தகவல் தெரிவிக்கவும். 70107 90816 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் பெயர் மறைமுகமாக வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.