/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
30 கிலோ வெள்ளி மோசடி வழக்கு 'பிடிவாரன்ட்'டால் பிடித்த போலீஸ்
/
30 கிலோ வெள்ளி மோசடி வழக்கு 'பிடிவாரன்ட்'டால் பிடித்த போலீஸ்
30 கிலோ வெள்ளி மோசடி வழக்கு 'பிடிவாரன்ட்'டால் பிடித்த போலீஸ்
30 கிலோ வெள்ளி மோசடி வழக்கு 'பிடிவாரன்ட்'டால் பிடித்த போலீஸ்
ADDED : நவ 13, 2025 01:39 AM
சேலம், முப்பது கிலோ வெள்ளி வாங்கி மோசடி செய்த வழக்கில், நீதிமன்றம், 'பிடிவாரன்ட்' பிறப்பித்ததை அடுத்து, அவரை, போலீசார் கைது செய்தனர்.
சேலம், இரும்பாலையை சேர்ந்தவர் தனலட்சுமி, 40. வெள்ளி வியாபாரியான இவரிடம் அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ், 45, என்பவர், 2012ல், 30 கிலோ வெள்ளி வாங்கினார். அதற்கு, 3 காசோலைகளை வழங்கினார். அவற்றை வங்கியில் செலுத்தியபோது பணமின்றி திரும்பியது. இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதில் தங்கராஜ் விசாரணைக்கு ஆஜராகாததால், மாஜிஸ்திரேட் பிடிவாரன்ட் பிறப்பித்தார். இதையடுத்து, அன்னதானப்பட்டி போலீசார், இரும்பாலையில் நேற்று, தங்கராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர்.