/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உலக தடகள போட்டிக்கு தேர்வு சேலம் போலீசாருக்கு பாராட்டு
/
உலக தடகள போட்டிக்கு தேர்வு சேலம் போலீசாருக்கு பாராட்டு
உலக தடகள போட்டிக்கு தேர்வு சேலம் போலீசாருக்கு பாராட்டு
உலக தடகள போட்டிக்கு தேர்வு சேலம் போலீசாருக்கு பாராட்டு
ADDED : நவ 13, 2025 01:39 AM
சேலம், சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில், 23வது ஆசிய மூத்தோர் தடகள போட்டி, கடந்த, 5 முதல், 11 வரை நடந்தது. அதில் சேலம் மாவட்டம் தேவூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் போலீஸ்காரர் தீபிகா, போல்வால்ட் போட்டியில் தங்கம் வென்றார். சேலம் மாவட்ட ஆயுதப்படை போலீசில் பணிபுரியும் ஏட்டு தமிழரசி, 40 வயதினருக்கான போல்வால்டில் தங்கம், 80 மீ., தடை தாண்டி ஓடுதலில் வெள்ளி வென்றார்.
சங்ககிரி போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் ஏட்டு சுரேஷ்குமார், 800 மீ., ஓட்டத்தில், 4ம் இடம் பிடித்தார். ஓய்வு பெற்ற, எஸ்.ஐ., மகாலிங்கம், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி வென்றார். இதன்மூலம் இவர்கள் அனைவரும் உலக மூத்தோர் தடகள போட்டிக்கு தேர்வாகினர். இவர்கள் நேற்று, போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரியை சந்தித்தனர். அப்போது அவர், அனைவரையும் பாராட்டினார்.