/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இணைய வழி மோசடி போலீசார் விழிப்புணர்வு
/
இணைய வழி மோசடி போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஏப் 13, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: கொளத்துார் போலீஸ் ஸ்டேஷ னில், பள்ளி மாணவ, மாணவி-யருக்கு இணைய வழி பாதுகாப்பு, விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.
தற்போதைய இணைய வழி மோசடிகள், டிஜிட்டல் பாதுகாப்பு, அதற்கான உதவி எண்கள், காவல் உதவி செயலி பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எஸ்.ஐ., மணிமாறன் தலைமையில் போலீசார், பெண்கள், குழந்தைகள் மீதான குற்றங்கள், தடுப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்-தனர். கொளத்துாரை சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

