/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
குடியரசு தின விழாவை முன்னிட்டு ரயில்களில் போலீசார் சோதனை
/
குடியரசு தின விழாவை முன்னிட்டு ரயில்களில் போலீசார் சோதனை
குடியரசு தின விழாவை முன்னிட்டு ரயில்களில் போலீசார் சோதனை
குடியரசு தின விழாவை முன்னிட்டு ரயில்களில் போலீசார் சோதனை
ADDED : ஜன 25, 2024 09:51 AM
சேலம்: குடியரசு தினத்தை முன்னிட்டு, நேற்று காலை முதல் சேலம் வழியாக இயக்கப்பட்ட ரயில்கள், முக்கிய இடங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர், மோப்ப நோய் கொண்டு சோதனை நடத்தியதோடு, ரயில்களில் பார்சல்களை அனுப்ப, மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே டி.எஸ்.பி., பெரியசாமி, இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார், ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஸ்மித் ஆகியோர் தலைமையில், போலீசார் ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகளின்
உடமைகளை மெட்டல் டிடெக்டர் கொண்டு சோதனை செய்த பின் அனுமதித்தனர். கோவை எக்ஸ்பிரஸ் ரயில் உட்பட பல்வேறு ரயில்களில் மோப்ப நாயை கொண்டு போலீசார் சோதனை நடத்தினர்.
சேலம் மகாத்மா காந்தி மைதானத்தில், நாளை நடக்கும் குடியரசு தின விழாவில் கலெக்டர் கார்மேகம் கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வதோடு, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா நடக்கும் இடத்தில், சேலம் மாநகர வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
குடியரசு தின விழாவை ஒட்டி அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில், புதிய, பழைய பஸ் ஸ்டாண்டுகள், தங்கும் விடுதிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.