ADDED : மே 04, 2025 01:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:வன்னியர் சங்க முழு நிலவு மாநாட்டிற்கு, பள்ளிப்பாளையம் பகுதியில் இருந்து பங்கேற்பவர்கள் விபரம் குறித்து, நேற்று, போலீஸ் ஸ்டேஷனில், பா.ம.க., நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. எஸ்.ஐ.,க்கள் மலர்விழி, செந்தில்வேல் ஆகியோர் தலைமை வகித்தனர். கூட்டத்தில், மாநாட்டிற்கு செல்லும் வழியில் பாதுகாப்போடு பயணத்தை மேற்கொள்ள வேண்டும். எந்த வித பிரச்னைகளையும் ஏற்படுத்தக் கூடாது.
எத்தனை பேர் செல்கிறார்கள் என்பதை போலீசாருக்கு தெரிவிக்க வேண்டும். அதிகளவு வாகனங்களில் சென்றால் அதற்குரிய அனுமதி பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தினர். பா.ம.க., மாவட்ட அமைப்பு செயலாளர் உமாசங்கர், நகர செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

