/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மெத்தனால், எத்தனால் விற்பனை மதுவிலக்கு போலீசார் ஆய்வு
/
மெத்தனால், எத்தனால் விற்பனை மதுவிலக்கு போலீசார் ஆய்வு
மெத்தனால், எத்தனால் விற்பனை மதுவிலக்கு போலீசார் ஆய்வு
மெத்தனால், எத்தனால் விற்பனை மதுவிலக்கு போலீசார் ஆய்வு
ADDED : ஜூன் 07, 2025 01:12 AM
ஆத்துார், மளிகை, கெமிக்கல் கடைகளில் மெத்தனால், எத்தனால் விற்பனை குறித்து, மதுவிலக்கு போலீசார் ஆய்வு செய்தனர்.
சேலம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி., மகாவிஷ்ணு தலைமையிலான ஆத்துார் மதுவிலக்கு பிரிவு, மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசர் நேற்று ஆத்துார், நரசிங்கபுரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை, கெமிக்கல் கடைகளில் மெத்தனால், எத்தனால் விற்பனை குறித்து ஆய்வு செய்தனர்.
அனுமதி பெற்றுள்ள கடைகளில் எத்தனால், மெத்தனால் பயன்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர். இவற்றை தவறான தொழில்களுக்கு விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை செய்தனர்.
இதுகுறித்து, மதுவிலக்கு போலீசார் கூறுகையில், 'சேலம் மாவட்டத்தில், 132 கடைகளில், கெமிக்கல் மூலம் சோப்பு, பினாயில் போன்ற தயாரிப்புகளுக்கு, அனுமதி பெற்று கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இதில், மெத்தனால், எத்தனால் கெமிக்கல் பொருட்களுடன் சேர்த்து, தரை மற்றும் கழிப்பறை சுத்தம் செய்தல் போன்றவைகளுக்கு பயன்படுத்துகின்றன. மெத்தனால், எத்தனால் கள்ளமார்க்கெட்டில் விற்பனை செய்தல் மற்றும் தவறான தொழிலுக்கு பயன்படுத்துவது கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது,'
என்றனர்.