/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாயமானவரின் மண்டை ஓடு கண்டெடுப்பு அடித்து கொலையா என போலீஸ் விசாரணை
/
மாயமானவரின் மண்டை ஓடு கண்டெடுப்பு அடித்து கொலையா என போலீஸ் விசாரணை
மாயமானவரின் மண்டை ஓடு கண்டெடுப்பு அடித்து கொலையா என போலீஸ் விசாரணை
மாயமானவரின் மண்டை ஓடு கண்டெடுப்பு அடித்து கொலையா என போலீஸ் விசாரணை
ADDED : அக் 26, 2025 01:16 AM
இடைப்பாடி, மானவரின், மண்டை ஓடு, எலும்பு, வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர் கொலை செய்யப்பட்டாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.
இடைப்பாடி, பக்கநாடு கிராமத்தில் உள்ள ஆணைபள்ளம் கொம்புத்தேன் குத்துகாட்டில், மண்டை ஓடு, கை, கால்களின் எலும்புகள், காவி வேட்டி, தனியார் சிமென்ட் விளம்பரத்துடன் கூடிய பனியன், இரும்பு கைகாப்பு ஆகியவை கிடந்தது. இதுகுறித்து நேற்று மதியம், 12:30 மணிக்கு பக்கநாடு வி.ஏ.ஓ., சிவக்குமாருக்கு தகவல் கிடைத்து, அங்கு சென்ற அவர், பூலாம்பட்டி போலீசாருக்கு புகார் கொடுத்தார்.
சம்பவ இடம், வனத்துறைக்கு சொந்தம் என்பதால் போலீசார், வனத்துறையின் வனக்காவலர் மதிவாணனுக்கு தகவல் தெரிவித்தனர். தடயவியல் நிபுணர்கள், தடயங்களை சேகரித்தனர். சமீபத்தில் யாராவது காணாமல் போனார்களா என, போலீசார் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
அரியாம்பட்டியை சேர்ந்தவர் சின்னுகவுண்டர், 48, வாய் பேச முடியாதவர். திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த மாதம், 25ல் மாயமானார். ஜலகண்டாபுரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அவரது உறவினர்களை அழைத்து வந்து காட்டியபோது, சின்னுகவுண்டர் அணிந்த வேட்டி, பனியன், கைகாப்பு என உறவினர்கள் அடையாளம் காட்டினர். பின் மண்டை ஓடு, எலும்புகளை பரிசோதனைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளோம். அவர், வனப்பகுதிக்கு சென்றது எப்படி, யாராவது கடத்தி கொன்றனரா என விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

