/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஓட்டலுக்கு குண்டு மிரட்டல் போலீஸ் சோதனையில் 'புஸ்'
/
ஓட்டலுக்கு குண்டு மிரட்டல் போலீஸ் சோதனையில் 'புஸ்'
ஓட்டலுக்கு குண்டு மிரட்டல் போலீஸ் சோதனையில் 'புஸ்'
ஓட்டலுக்கு குண்டு மிரட்டல் போலீஸ் சோதனையில் 'புஸ்'
ADDED : ஆக 02, 2025 01:13 AM
சேலம், சேலம், 3 ரோட்டில் தனியார் தங்கும் விடுதி, ஓட்டல் ஒருசேர இயங்குகிறது. அதன் அலுவலக மொபைலுக்கு, நேற்று இரவு, 7:34 மணிக்கு குறுந்தகவல் வந்தது. அதில், ஓட்டலுக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது.
அதிர்ச்சியடைந்த மேலாளர் வெங்கடேசன், உடனே மாநகர் போலீஸ் கட்டுப்பாடு அறை, பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். பள்ளப்பட்டி போலீசார்,வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீசார், மோப்பநாய் சகிதமாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கிருந்தவர்களை வெளியேற்றிவிட்டு, சோதனையில் ஈடுபட்டனர். 4 அடுக்கு கொண்ட விடுதியில் உள்ள, 66 அறைகள், ஓட்டல் முழுதும் சோதனை நடத்தியும் எதுவும் சிக்கவில்லை.
கடைசியில் புரளி என தெரிந்தது. புதுக்கோட்டையை சேர்ந்தவர், 'போதை'யில் தகவல் அனுப்பியது கண்டு
பிடிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது.

