/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நகை கொள்ளை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
/
நகை கொள்ளை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
ADDED : நவ 12, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரிப்பட்டி, காரிப்பட்டி போலீசார் சார்பில், நேற்று முதல், நகை திருட்டு குறித்து முதியோர் மற்றும் பெண்களுக்கு, ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக, 'வருமுன் காப்பதே சிறந்தது' தலைப்பில், 'முதியவர்களை, வீட்டில் தனிமைப்படுத்தி வைக்க வேண்டாம்; வீட்டில் உள்ளவர்களிடம் முகவரி, தண்ணீர் கேட்டால், கதவை திறக்காமல் பதில் சொல்லவும்; 'சிசிடிவி' கேமரா பொருத்தி குற்றத்தை தடுப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை, ஆட்டோவில் பொருத்தி, அக்ரஹார நாட்டாமங்கலம், குள்ளம்பட்டி, சின்னகவுண்டாபுரம் உள்ளிட்ட கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

