ADDED : நவ 12, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி, சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்ட சேவைகள் தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. சங்ககிரி வட்ட சட்டப்பணி குழு தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள, 4 நீதிமன்ற வழக்குகளில் ஆஜராக வந்த மக்க
ளிடம், 'சட்டப்பணி குழு சார்பில் அனைத்து தரப்பினருக்கும் இலவச சட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன; பெண்கள், குழந்தைகள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளிகள், இலவச சட்ட உதவிகள் தேவைப்படுவோர், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் வட்ட சட்டப்பணி குழு அலுவலகத்தை தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம்' என அறிவுறுத்தினார். நீதிபதிகள் இளமதி, சத்யா, சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

