/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
/
பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : நவ 12, 2025 01:39 AM
ஓமலுார், காடையாம்பட்டி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ப்ரியங்கா அறிக்கை:
காடையாம்பட்டி வட்டாரத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில், ரபி(2025ம் ஆண்டு) பருவத்துக்கு வெங்காயம், தக்காளி, மரவள்ளி, வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம். இதன்மூலம் வடகிழக்கு பருவமழையின்போது, ஏதாவது இயற்கை இடர்பாடுகளால், தங்கள் பயிர்களுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில், பயிர் நிவாரணம் பெறமுடியும்.
தக்காளி, வெங்காயம் பயிர்களுக்கு, 2026 ஜன., 31 வரை, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். இதற்கு பிரீமியம் தொகை, ஏக்கருக்கு தக்காளி, 1,863 ரூபாய், வெங்காயம், 2,113 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாழை, மரவள்ளி பயிர்களுக்கு, 2026 பிப்., 28 வரை, விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யலாம். பிரீமியம் தொகையாக ஏக்கருக்கு வாழை, 767 ரூபாய், மரவள்ளி, 1,326 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் அருகே உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விபரம் பெற, காடையாம்பட்டி வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களை அணுகலாம்.

