/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
12 வங்கதேசத்தவர் கைது மேலாளரிடம் விசாரணை
/
12 வங்கதேசத்தவர் கைது மேலாளரிடம் விசாரணை
ADDED : நவ 12, 2025 01:40 AM
சேலம், சேலம், கன்னங்குறிச்சி அருகே கோம்பைக்காட்டில், 'அப்ரேல் கிங்டம்' பெயரில், 'ஸ்வெட்டர்' தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அங்கு தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் சோதனை செய்ததில், வங்கதேசத்தை சேர்ந்த தம்பதி உள்பட, 12 பேர் சட்டவிரோதமாக தங்கி இருப்பது தெரிந்தது.
அவர்களை, சூரமங்கலம், புது ரோடு, அய்யனார் கோவில் அருகே உள்ள குடியிருப்பில், அந்த நிறுவன மேலாளர் ரீகன் தங்க வைத்ததும் தெரிந்தது.
இந்நிலையில், 12 பேரும், ஆத்துாரில் உள்ள முகாமுக்கு, போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர். இந்நிலையில் ரீகனிடம் தனிப்படை போலீசார் நேற்று விசாரித்தனர்.
இதுகுறித்து போலீ
சார் கூறியதாவது: ரீகன், திருப்பூரில் இருந்த வங்கதேசத்தவர்களை, சேலம் அழைத்து வந்து பணி அமர்த்தியுள்ளார். அவர்களுக்கு தேவையான ஆவணங்களை போலியாக தயாரித்து, யாருக்கும் சந்தேகம் வரா
தபடி, 12 பேரையும் தனி இடத்தில் தங்க வைத்
துள்ளார்.
ஏற்கனவே ரீகன் நிறுவனத்தில், 2 ஆண்டுக்கு முன், வங்கதேசத்தை சேர்ந்த, 2 பேர் பணி செய்தபோது கைது செய்யப்பட்டனர். இதனால் ரீகனுக்கு வங்காளதேசத்தில் தொடர்பு உள்ளதா, அந்த நாட்டினரை எப்படி பணிக்கு
கொண்டு வந்தார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

