தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ 'எந்த கட்சிக்கும் போலீசார் துணை போகக்கூடாது'

'எந்த கட்சிக்கும் போலீசார் துணை போகக்கூடாது'

'எந்த கட்சிக்கும் போலீசார் துணை போகக்கூடாது'


ADDED : மார் 07, 2026 04:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 04:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஓமலுார் சப் - டிவிசன் போலீசாருக்கு, தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் பாதுகாப்பு பணி தொடர்பான ஆலோசனை கூட்டம், ஓமலுார் அருகே உள்ள தனியார் கல்லுாரியில், நேற்று நடந்தது. டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் தலைமை வகித்து பேசியதாவது:

தேர்தல் நேரத்தில் போலீசார் எந்த கட்சிகளுக்கும் துணை போகக்கூடாது. சோதனை பணியின்போது உரிய கவனம் செலுத்த வேண்டும். ஓட்டுச்சாவடிகளில் அமைதியை நிலை நாட்ட வேண்டும். பணம், பொருட்கள் பறிமுதல் செய்தால் உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பிரசாரத்துக்கு வரும் வாகனங்களை முறையாக கண்காணிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிகளை மீற அனுமதிக்கக்கூடாது.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓமலுார், தீவட்டிப்பட்டி, தாரமங்கலம், தொளசம்பட்டி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி ஸ்டேஷன் போலீசார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us