/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மாணவியர் பிரச்னை தீர 'போலீஸ் அக்கா திட்டம்'
/
மாணவியர் பிரச்னை தீர 'போலீஸ் அக்கா திட்டம்'
ADDED : அக் 29, 2024 01:19 AM
மாணவியர் பிரச்னை தீர
'போலீஸ் அக்கா திட்டம்'
சேலம், அக். 29-
சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லுாரியில், போலீஸ் அக்கா திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது.
போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு முன்னிலை வகித்து பேசினார். கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து பேசியதாவது:
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும், ஒரு பெண் போலீஸ் தேர்வு செய்யப்பட்டு, அப்பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்கும் வகையில், போலீஸ் அக்கா திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், மாணவியரின் பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுடன், மாணவியர்-போலீஸ் இடையே உள்ள இடைவெளி குறைக்க உதவுகிறது. மாணவியருக்கு, சைபர் கிரைம் மற்றும் கேலி செய்தல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், உடனடி தீர்வுகாணும் வகையில் தங்களது கல்லுாரிக்குரிய போலீஸ் அக்காவை தொடர்பு கொண்டால், உரிய உதவிகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.